ஆட்சி அமைக்க மட்டும்தான் சப்போர்ட்.. மத்தபடி நோ டீல்! வெளியிலிருந்து ஆதரவு தந்து வேடிக்கை பார்க்கும் சிபிஎம்! - திமுக-வுடனான உறவு அப்படியேதான் இருக்கும்! கோட்டையில் அரங்கேறும்  சதுரங்கம்..!!

ஆட்சி அமைக்க மட்டும்தான் சப்போர்ட்.. மத்தபடி நோ டீல்! வெளியிலிருந்து ஆதரவு தந்து வேடிக்கை பார்க்கும் சிபிஎம்! - திமுக-வுடனான உறவு அப்படியேதான் இருக்கும்! கோட்டையில் அரங்கேறும் சதுரங்கம்..!!

செய்தி சோலை

செய்தி சோலை

1hr

Loading...

மிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை நெருங்கி வரும் சூழலில், சிபிஎம் (CPM) மாநிலச் செயலாளர் பெ.

சண்முகம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

"தவெக தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை வழங்குகிறது; இது தவெக-வுடனான அரசியல் கூட்டணியோ அல்லது தேர்தல் உடன்பாடோ கிடையாது" என்று அவர் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்யின் அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது என்றும், வெளியிலிருந்து மட்டுமே இந்த ஆதரவு தொடரும் என்றும் குறிப்பிட்ட அவர், மாநில நலன் சார்ந்த அடிப்படை விவகாரங்களில் திமுக-வுடன் தங்களது பயணம் எப்போதும் போலத் தொடரும் எனக்கூறி ஒரு பெரிய ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

கம்யூனிஸ்ட்களின் இந்த 'நிபந்தனையுடன் கூடிய ஆதரவு' காரணமாக, தவெக மற்ற கட்சிகளைச் சேர்க்காமல் தனித்தே ஆட்சியமைப்பது தற்போது நூறு சதவீதம் உறுதியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai

Comments

1
Loading comments...