ஆளுநரை சந்திக்க கிளம்பிய விஜய் - நெற்றியில் திலகம்.. முகத்தில் சிரிப்பு.. அடிபொலி!

ஆளுநரை சந்திக்க கிளம்பிய விஜய் - நெற்றியில் திலகம்.. முகத்தில் சிரிப்பு.. அடிபொலி!

Oneindia

Oneindia

21m

Loading...

மிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பமாக, கடந்த 4 நாட்களாக ஆட்சி அமைக்கவும், கூட்டணி உருவாக்கவும் போராடி வந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், ஆளுநரை சந்திக்க கிளம்பியுள்ளார்.

இன்று கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் விஜயின் தவெக கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளது, விசிக தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை செய்து வரும் வேளையில் விஜய் ஆளுநரை சந்திக்க உள்ளார்.

இதன் மூலம் தவெகவின் 107, காங்கிரஸின் 5, கம்யூனிஸ்ட் மற்றம் மார்க்சிஸ்ட் தலா 2 என மொத்தம் 116 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கிடைத்திருக்கும் நிலையில், 2 இடங்கள் கிடைத்தால் விஜய்க்கு முதல்வர் பதவியும், ஆட்சியும் கிடைக்கும். இதேவேளையில் விசிக மின்னஞ்சலில் விஜய்க்கும் ஆளுநர் மாளிகைக்கும் ஆதரவு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் இல்லத்துக்கு செல்லும் விஜய் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் பயணம் செய்து, தற்போது கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை சென்றடைந்தார். காரில் நெற்றியில் திலகம்.. முகத்தில் சிரிப்பு.. என மக்களுக்கு மிக்க மிகழ்ச்சியுடன் காணப்பட்டார்.

118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன் தவெக தலைவர் விஜய் ஆளுநர் மாளிகை வந்துள்ளார். ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை 3வது முறையாக சந்திக்கும் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

கடந்த 10 -15 நிமிடமாக ஆளுநர் மாளிகை, விஜய் வீடு, தவெக அலுவலகம் என அனைத்து இடங்களிலும் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மேள தாளங்கள் உடன் ஆடி கொண்டாடி வருகின்றனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு ஊட்டி வருகின்றனர்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெளிவாக அறிவித்துள்ளார். "போதிய பெரும்பான்மை ஆதரவுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வரை, பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க முடியாது" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவு தவெகவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. கூடுதல் ஆதரவைப் பெற விஜய் தரப்பு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு தற்போது ஆட்சியை அமைக்கும் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உடன் பெரும்பான்மை பெற்று முதல்வராகிறார் விஜய்.

Prasanna Venkatesh Oneindia

source: oneindia.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: OneIndia Tamil