கையில் சிகப்பு கயிறு! நெற்றியில் திலகம்! முகம் முழுக்க 1000 வாட்ஸ் பல்ப்! மகிழ்ச்சியில் விஜய்

கையில் சிகப்பு கயிறு! நெற்றியில் திலகம்! முகம் முழுக்க 1000 வாட்ஸ் பல்ப்! மகிழ்ச்சியில் விஜய்

Oneindia

Oneindia

44m

Loading...

சென்னை: 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜய், வலது, கை மணிக்கட்டில் சிகப்பு நிறத்தில் ஏதோ கயிறு கட்டி இருந்தார்.

அது போல் நெற்றியில் திலகமிட்டிருந்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் 107 எம்எல்ஏக்களுடன் (திருச்சி கிழக்கு வெற்றி நீங்கலாக) தவெக வென்றது. இதையடுத்து 118 எனும் மேஜிக் நண்பரை எட்டுவதற்காக விஜய் தரப்பு காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

அதன்படி 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. இதனால் தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்தது. மீதம் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளிடம் உள்ள தலா 2 எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய் நாடியிருந்தார்.

அக்கட்சியினர் இரு தினங்களாக ஆலோசனை நடத்திய நிலையில் இரு கம்யூனிஸ்ட்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது. தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விசிக மின்னஞ்சல் மூலம் ஆளுநர் மாளிகைக்கும் விஜய்க்கும் ஆதரவு கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்த மகிழ்ச்சியில் மூன்றாவது முறையாக விஜய், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். அவர் முதல்வருக்கான கான்வாய் வாகனங்களுடன் வந்தார்.

நெற்றியில் திலகமிட்டு, வலது கையில் சிகப்பு நிற கயிறு கட்டிக் கொண்டு சென்றுள்ளார். இது வரை அவரது கையில் காப்பு ஒன்று இருக்கும். தற்போது புதிதாக கயிறும் இருக்கிறது.

விஜய் ஆளுநர் மாளிக்கைக்கு செல்லும் வழியெங்கும் தவெகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அது போல் பனையூர் அலுவலகத்தில் தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் செல்லும் போது முதல்வர் வாகனத்திற்காக மற்ற வாகனங்கள் நிறுத்தப்படுவதை போல் தற்போதும் விஜய் வாகனத்திற்காக மற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

முதல் நாளில் முகத்தில் இருந்த கலகலப்பு நேற்று இரண்டாவது முறையாக ஆளுநரை சந்திக்க சென்ற போது இல்லை. ஆனால் இன்றைய தினம் கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால் தவெகவின் பலம் 120-ஆக உயர்ந்துள்ளது. இந்த கடிதங்களுடன் ஆளுநர் அர்லேகரை மூன்றாவது முறையாக விஜய் பார்த்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் அவர் ஆட்சி அமைக்க அழைக்கும் பட்சத்தில் நாளை பதவியேற்பார் என சொல்லப்படுகிறது.

112 பேரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரியதற்கு பெரும்பான்மையுடன் வாருங்கள் என ஆளுநர் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் ஆளுநர் மாளிகை அல்ல, சட்டசபைதான் என பலரும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க போகிறார்கள் என்றெல்லாம் வதந்தி பரவியது. இப்படி ஒன்று நடந்தால் தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்திருந்தனர். எனினும் அதிமுக- திமுக இணைப்பு குறித்த தகவலை திமுக மறுத்தது. விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஸ்டாலினும் அர்லேகருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் தவெகவுக்கு போதிய ஆதரவும் கிடைத்தும் ஆட்சி அமைக்கவும் போகிறது.

Vishnupriya R Oneindia

source: oneindia.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: OneIndia Tamil

Comments

3
Loading comments...