Breaking: தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கனும். சுப்ரீம் கோர்ட்டை நாடியது தவெக.. பரபரப்பு மனு..!!

Breaking: தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கனும். சுப்ரீம் கோர்ட்டை நாடியது தவெக.. பரபரப்பு மனு..!!

செய்தி சோலை

செய்தி சோலை

53m

Loading...

மிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது என கூறி வருகிறார்.

இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகளிடம் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு கேட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளது. இன்னும் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவுக்காக தமிழக வெற்றி கழகம் காத்திருக்கிறது.

தமிழக வெற்றி கழகத்திற்கு திருமாவளவன் ஆதரவு கொடுத்தால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைத்துவிடும். இந்த நிலையில் தனி பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனி பெரும் கட்சி என்று அடிப்படையில் தமிழக வெற்றிக்கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் பெரும்பான்மை உறுப்பினர் பட்டியலை கேட்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தமிழக வெற்றி கழகம் தங்களுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளது. மேலும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே போதுமானது ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டாம் என பல அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது குறிப்பிடத்தக்கதாகும் ‌

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai