தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக தனிப் பெரும்பான்மையாக 108 இடங்களில் வெற்றி பெற்றுக்கிறது.
எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆட்சியமைக்க இன்னும் கூடுதலாக 6 இடங்கள் தேவையாக இருக்கும் சூழலில், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவையும் தவெக கோரிவந்தது.
தவெக தலைவர் விஜய்முதற்கட்டமாக, தவெக தரப்பில் இருந்து கடிதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் சிபிஐ மற்றும் சிபிஎம் அலுவலகங்களுக்கு நேரில் அக்கட்சியின் மாநில செயலாளர்களை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். இந்த இரண்டு கட்சிகளும் தங்களது முடிவுகளை இன்று (மே 8) அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி இருக்கிறது. இதற்கான கடிதத்தையும் தனது கட்சி அலுவலகத்திற்கு வந்த தவெக இணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம் வழங்கிருக்கிறது.
தொடர்ந்து, சிபிஎம் கட்சி செயற்குழுக் கூட்டம் நடைபெற்று இருந்த நிலையில், அக்கூட்டத்திற்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அக்கட்சி தெரிவித்திருக்கிறது. இதன்மூலம், தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 117 ஆக உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே, இடதுசாரிகளின் முடிவுகளைப் பொறுத்தே தாங்கள் முடிவுகளை அறிவிக்கவிருப்பதாக விசிக தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சி இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது. இதற்குப் பிறகு, அந்தக் கட்சியின் நிலைபாடு தெரியவரும். விஜய் முதல்வராகவதற்கு 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவே தேவைப்படும் நிலையில், அவர் முதல்வர் நாற்காளிக்கு அருகில் இருக்கிறார்.
பெ. சண்முகம்ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கின்றனர். இது திமுக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
'யாருக்கும் ஆதரவாக பாஜக வாக்களிக்காது..' - நயினார் நாகேந்திரன்
